கட்டமைப்புப் பொறியியல் (Structural engineering)
குடிசார் பொறியியலின் ஓர் உட்புலமாகும். இப்புலத்தில் கட்டமைப்புப் பொறியாளர்கள் கட்டிடங்களுக்கும் கட்டிடம் சாராத அமைப்புகளின் கட்டமைப்புகளின் நிலைப்பு, வலிமை, விறைப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் முன்கணிக்கவும் கணக்கிடவும் பயிற்சி அளிக்கப்படுகின்றனர் இவர்கள் கட்டமைப்புகளின் வடிவமைப்புகள் செய்து அவற்றை பிறர் செத வடிவமைப்புகளோடு ஒருங்கிணத்து களத்தில் திட்டங்களின் கட்டுமானத்தை மேற்பார்வை செய்கின்றனர். கட்டமைப்பு ஒருமை செயல்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய தேவைப்படும்போது இவர்கள் எந்திரத் தொகுதி, மருத்துவக் கருவிகள், ஊர்திகள் ஆகியவற்றையும் வடிவமைப்பர்.
கட்டமைப்புப் பொறியியலின் கோட்பாடு பயன்முறை இயற்பியலையும் கட்டமைப்புகளின் பல்வேறு பொருள்களின், வடிவவியல்களின் செயல்திறப் பட்டறிவையும் சார்ந்து உருவாகிறது. இப்பொறியியல் சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்க எளிய கட்டமைப்பு உறுப்புகளைப் பயன்படுத்துகிறது. கட்டமைப்புப் பொறியாளர்கள் இந்த இலக்குகளை அடைய, நிதி, கட்டமைப்பு உறுப்புகள், பொருள்கள் ஆகியவற்றை ஆக்கநிலையிலும் திறம்படவும் பயன்படுத்தும் பொறுப்புள்ளவர்கள் ஆவர்.
வெளி இணைப்புகள்
Comments